யுனிகோட் என்பது தனி சாப்ட்வேர் அல்ல. இதை எங்கும் போய் வாங்கத் தேவையில்லை. முன்பு திஸ்கி (TSCII) இருந்தது போல இதுவும் ஒரு வகை எழுத்துரு (font) தான். எழில் நிலா தளத்தில் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் உள்ளது.

தமிழ் யுனி கோட் தளத்தினை பார்க்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ் யுனி கோடில் தட்டச்சு செய்வது எப்படி?

விண்டோஸ் 98 பயன்படுத்துவோர் எப்படி யுனிகோட் பயன்படுத்துவது?

என ஒவ்வொன்றிற்கும் விளக்கம் உள்ளது. எனவே தயவு செய்து இத்தளத்தினை சென்று பார்க்கவும்.

தட்டச்சு செய்வது குறித்து சில நண்பர்கள் விளக்கம் கேட்டிருந்தீர்கள். இதோ நான் கற்றறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே.

முரசு அஞ்சல் இலவச மென்பொருளின் எடிட்டரில் யுனிகோட் தட்டச்சு சரியாகப் பணி புரிவதில்லை. சரியாக பணிபுரிய அவர்களின் புதிய வெர்சன் 9.7 விலை கொடுத்து வாங்க வேண்டும்.

எ-கலப்பை என்ற இலவச மென்பொருளை வைத்திருப்பது தான் மிக எளிதான வழி. ஏற்கனவே எ-கலப்பை வைத்திருப்பவர்கள் முதலில் அதை நீக்கவும். பின் http://ezilnila.com/software.htm என்ற இணைய தளம் சென்று எ-கலப்பை 2.0 அஞ்சல் (File name - ekalapai20b_anjal.exe) என உள்ள செயலியை பெற்று உங்கள் கணினியில் நிறுவுங்கள். நீங்கள் இப்போது தயார்.

Word Pad அல்லது Notepad ஐ திறந்து கொள்ளுங்கள். இப்போது

ALT + 1 - English
ALT + 2 - Unicode typing
ALT + 3 - TSCII Typing


அவ்வளவே தான்.

யுனி கோட் தரமானது Windows XP/2000 போன்ற இயங்கு தளங்களில் (Operating System) உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் Windows 98/ NT & IE 5.0 உபயோகிப்பவர்களுக்கு யுனிகோட் சரியாகத் தெரியாவிடில் கீழ்கண்டவாறு செய்யவும்.

முதலில் C:\WINDOWS\SYSTEMக்கு சென்று அங்கிருக்கும் USP10.DLL என்ற கோப்பை வேறு பெயரிட்டு பாதுகாக்கவும்.

பின் USP10.DLL Updated Version ஐ இந்த லிங்கில்இருந்து பெற்று அதே இடத்தில் இடுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை சீரான முறையில் காண இயலும்.

நன்றி - http://www.jaffnalibrary.com/tools/tools.htm

Go to C:\WINDOWS\SYSTEM
Rename the USP10.dll
Now go to and get the USP10.dll file and put it in C:\WINDOWS\SYSTEM.

When you find any website or web mail in Unicode, simply change encoding by selecting

View >> Encoding >> Unicode (UTF- or right click and select Encoding >>Unicode (UTF-8).

வேறு ஏதேனும் உதவிகள் தேவை எனில் தெரிவிக்கவும். நன்றி